நானிருந்திருந்தால் நடந்திருக்காது: மைத்ரி முள்ளிநியூஸ்

நானிருந்திருந்தால் நடந்திருக்காது: மைத்ரி


அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் மீதான கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்ப் பிரயோகம் தான் நாட்டில் இருந்திருந்தால் நடந்திருக்காது என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.

சோபித தேரர் மறைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, தான் இருந்திருந்தால் ஆர்ப்பாட்டக்காரர்களை ஜனாதிபதி செயலகத்துக்குள் அழைத்து கலந்துரையாடி சுமுகமான தீர்வொன்றை எட்டியிருக்கக் கூடும் என மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு கலந்த இராவணா பலய துறவிகளாலேயே பதட்ட நிலைமை உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW