புல்மோட்டையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு: அன்வர் முள்ளிநியூஸ்

புல்மோட்டையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு: அன்வர்


File photo

புல்மோட்டை 13ஆம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக வெளி மாகாணத்தைச்சேர்ந்த பெரும்பாண்மை இன குடியேற்றங்கள் சில அமைக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேற்கொண்ட நடவடிக்கையினால் குச்சவெளி பிரதேச செயலாளரினால் அவசர அறிக்கை ஒட்டப்பட்டும் வெளி ஏறாத நிலையில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் 2017 பெப்ரவரி மாதம் சட்ட விரோத குடியேற்றங்களை அகற்றுவதற்கான நிலையில்.

குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட இனவாத கும்பல்களின் ஒருவரான கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முகநூலில் அமித் வீரசிங்க என்ற பெயரில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் புல்மோட்டை பிரதேசம் ஊடாக வீடியோ பதிவை மேற்கொண்டு அதனூடாக புல்மோட்டை பிரதேசத்தில் சவூதி அராபியாவின் நடைமுறைகளை பின் பற்றியே அங்குள்ள மக்கள் வாழுவதாகவும், அதிகமான பள்ளிவாசல்கள் காணப்படுவதாகவும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அதிகமாக அணியும் நடைமுறையும், பாக்கிஸ்தான் நாட்டின் நடை முறையினை பின்பற்றியே முஸ்லிம் ஆண்கள் தாடிகள் வளர்க்கப்படும் நடவடிக்கைக்கு எதிராகவும் பௌத்தர்களுக்கு சொந்தமான இடத்தை முஸ்லிம்கள் யுத்தத்திற்கு பின்பு அடாவடித்தனமாக பிடித்திருப்பதாகவும் புல்மோட்டை முஸ்லிம்களுடைய கடைகளில் சிங்களவர்கள் யாரும் பொருட்கள் வாங்கக்கூடாது என்பதுடன் எதிர்வரும் (27ஆம்திகதி – ஞாயிறு) நாளை குறித்த சட்ட விரோத பகுதியில் சிங்கள மக்களுக்காக புதிய கடை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு சிங்க பௌத்த இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதுடன் குறித்த தினத்தில் இப்பகுதிக்கு வரவேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டு இனவாத கருத்துக்கள் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றினை தன்னுடைய முகநூலினூடாக இட்டிருந்தார்.
இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்களுக்கு அறிவித்ததை தொடர்ந்து கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பணித்ததுடன் இதுவிடயமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, திருகோணமலை மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, குச்சவெளி பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு மேற்படி விடயமாக இனவாத கருத்துக்கள் அடங்கிய வீடியோ மற்றும் போட்டோக்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த அமித் வீர சிங்க என்பவர் பொதுபல சேனாவுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதுடன் கடந்த கால கண்டியில் பொதுபல சேனாவின் ஆர்ப்பாட்ட பேரணியில் இணைந்து கொண்டு இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.


இதனூடாக புல்மோட்டை பிரதேச மக்கள் பதற்றமடைந்த நிலையில் குறித்த விடயமாக அரசாங்க அதிபர், பொலிஸ் அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்ததன் அடிப்படையில் 26.11.2016ஆந்திகதி – சனிக்கிழமை இன்று 14ஆம் கட்டை பகுதிக்கு குச்சவெளிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் அடங்கிய குழுவினர் அனுப்பப்பட்டதுடன் குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் அவர்களையும் அனுப்பி சட்ட விரோத கட்டடங்கள் எதையும் அனுமதிக்கக்கூடாது என்பதுடன் இன்று குறித்த பகுதிக்கான விசேட பாதுகாப்பிற்காக்க திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிசார் புல்மோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.

-எம்.ரீ. ஹைதர் அலி

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW