பாபாதமலை ஹோட்டலும்..மீள உருப்பெற்ற ஞானசேரரும்..கண்டு கொள்ளாமல் இருக்கும் நல்லாட்சியும்..!! ஒரு துவேஷத்தின் கதை

இன நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு உதயமான தற்போதைய கூட்டாட்சி அரசாங்கம் எதிர் காலத்தில் இலங்கையில் இனவாதம், மதவாதம் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்று கூறிய போதிலும் அதன் மீள் உருவாக்கம் தற்போது உருவெடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் அமைதியையும், சமாதானத்தினையும் குழப்பி மக்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் இன நல்லிணக்கம், ஒற்றுமை, புரிந்தணர்வு போன்ற விடயங்களில் கலங்கத்தினை ஏற்படுத்த பொதுபல சோன இலங்கைவாழ் முஸ்லிம் சமுகத்தின் மீது தமது விரலை நீட்டுவது இலங்கையில் மீண்டும்மொரு இரத்தக்கலரியை ஏற்படுத்தும் ஓர் அபாய நிலைக்குச் செல்வதனையே காட்டி நிற்கின்றது.
பொதுபல சேனா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசினால் ஊட்டி வளர்க்கப்பட்டு அந்த அரசாங்கத்தின் காலத்தில் சிறுபான்மைச் சமுகங்களான முஸ்லிம், தமிழ் மக்களின் சமய விழுமியங்களை கொச்சைப்படுத்தியது மட்டமல்லாது அளுத்கம பகுதிகளில் முஸ்லிம்கள் மீது அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொலைக் கலாச்சாரம் உள்ளிட்ட அவர்களின் விரும்பத்தகாத மிகவும் அருவருக்கத்தக்க பல செயற்பாடுகளால் இந்த இரு சமுகங்களும் சொல்லொனா வேதனையையே அனுபவித்தனர். இந்த வேளையில் தமக்கு ஏற்பட்ட அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் நீதி கேட்டுச் செல்ல முடியாத மிக மோசமானதொரு துர்ப்பாக்கிய அரசியல் கலாச்சாரத்தில் வாழ்ந்ததை யாரும் மறந்துவிட முடியாது.
மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்கள் ஒவ்வொரு கனப்பொழுதையும் ஒரு அபாயகரமான நிலைமையின் கீழே கழித்து வந்தனர். இதற்குக் காரணம் பொதுபல சேனாவின் அட்டூழியங்களுக்கும், அடாவடித் தனங்களுமாகும். இதற்கு விடிவு கிடைக்காதா, அவர்களின் தீய கொள்கைகள் ஒடுக்கப்படாதா? என்ற கவலையுடனும், ஏக்கத்துடனும் இருந்த மக்களுக்கு 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி மகிழ்ச்சியையும், சந்தோசத்தினையும் கொடுத்தது என்றால் அது மிகையாகாது எனலாம்.
பொதுபல சேனாவின் தீய செயற்பாடுகளின் விளைவே 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து அவர் வீடு; செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டமையானது இன்று வரலாற்றில் பதிவான செய்தியாகும்.
அந்தளவிற்கு இலங்கை வாழ் சகல சமுகங்களினதும் உணர்வுகளை ஆழமாக பாதிக்க வைத்த தீய செயற்பாடுகளைச் செய்தவர்களாக பொதுபல சேனா காணப்பட்டது. மேற்படிச் செயற்பாடுகள் அவர்கள் மீதான வெறுப்புக்களுக்கும் அவர்களை ஓரங்கட்டுவதற்கும் தேர்தல் வெற்றி வழி வகுத்தது.
இவ்வாறான நிலையில் மாற்றத்தினை எதிர்பார்த்த மக்களுக்கு அவர்களின் மனங்களில் மலர் தூவப்பட்ட ஒரு நல்ல நாளாகவும், புதுமனத் தம்பதிகள் போல் இலங்கை வாழ் சகல சமுகங்களும் தமது நிம்மதியான புதுவாழ்வை ஆரம்பிக்கத் தொடங்கினர். பெரும்பான்மையான மக்களினதும் எதிர்பார்ப்புக்கள் புதிய அரசின் நம்பகத் தன்மையான வாக்குறுதிகளின் பயனாக தமது இயல்பு வாழ்க்கையை ஆரம்பித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் என்றே கூறலாம்.
இவ்வாறான அமைதியான சூழலில் சில மாதங்கள் அடங்கிப்போய் அச்சத்தடன் இருந்த பொதுபல சேனா புதிய அரசாங்கம் தம்மால் இழைக்கப்பட்ட கடந்தகால குற்றங்களுக்கு தம்மீது ஒன்றையும் செய்ய வில்லை என்ற சந்தர்ப்பத்தினை சாதகமாகப் பயன்படுத்தி இனியும் நாம் என்ன செய்தாலும் இந்த அரசும் ஒன்றும் செய்ய முன்வராது என்ற என்னத்தில் மீண்டும் அவர்களின் தீய கருமித் தனங்களை முஸ்லிம்கள் மீது காட்டும் செயற்பாடுகளை தற்போது ஆரம்பித்த பத்திரிகையாளர்கள் மாநாடுகளை நடாத்தி மீண்டும் முஸ்லிம்கள் குற்றவாளிகள், பயங்கரவாதிகள் என்ற கோணத்தில் இல்லாத பொல்லாத கதைகளை சோடித்தும் முஸ்லிம்களை சீண்டுவதற்கு புதிய பதிய பொய்யான கண்டு பிடிப்புக்களை கூறி அமைதியான முறையில் இன நல்லிணக்கத்துடன் வாழத் துடிக்கும் மக்களை சண்டைக் காரர்களாகவும், விரோதிகளாகவும் ஆக்கி சமுகத்தினை கூறுபோடும் வகையில் அவர்களினால் இனவாத கருத்துக்கள் தூவப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.
எந்த விதத்திலாவது இந்த நாட்டில் அமைதியாக வாழும் சிறுபான்மை முஸ்லிம்களை சமய ரீதியாக நசுக்கி நாட்டின் ஜனநாயகம், ஒருமைப்பாடு என்பனவற்றை சின்னா பின்னமாக்கும் கைங்கரியத்தில் இவர்கள் இறங்குவதற்கு அடுத்த கட்டமாக புதிய பொய்கைள புனையும் வல்லமை படைத்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் முஸ்லிம்கள் சிவனொலி பாத மலைக்கு அருகில் அறபு ஹோட்டல்களை கட்டி இந்த நாட்டின் காணிகளை கூ10றையாடுவதாகவும் இதன் மூலம் அறபு மக்கள் இங்கு வருவதற்கும், இந்த நாட்டின் கலாச்சாரம் சீரழிவதற்கும் வழிவகுக்கப்படுவதாக அப்பட்டமான பொய்க் குற்றத்தை சுமத்துகின்றார்.
குறித்த பிரதேசத்தில் கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு முதலீட்டை வரவழைப்பதற்கும், அதனை ஊக்குவித்து நாட்டின் அந்நிச் செலாவணியை சுற்றுலாத் துறையூடாக பெற்று நாட்டின் வழுவிழந்துள்ள பொரளாதாரத்தினை கட்டியெழுப்பவதற்கு அரசாங்கத்தினால் சட்ட ரீதியான முறையில் அனுமதி வழங்கப்பட்டு சுமார் 83 ஏக்கர் காணி பெறப்பட்டு வெளிநாட்டு கம்பனி ஒன்றிற்கு வழங்கப்பட்டே அந்த ஹோட்டல் கட்டப்படவதாக அறியப்படுகின்றது.
பொதுபல சேனா ஜனநாயக மற்றும் இலங்கை அரசியல் சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு ஒரு அரசாங்கம் இருக்கின்றது என்ற நிலைமைகளைக்கூட மறந்து ஒருசில ஆட்சியாளர்களின் ஆதரவுடன் தமது காட்டுத் தர்பார் முறையில் சட்டத்தினை கையில் எடுத்து கொலைக் கலாச்சாரத்தினைக்கூட செய்த பொதுபல சேனா அந்த நேரத்தில் ஏன் சிவனொளி பாதமலையில் அறபு ஹோட்டல்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டதையும், அதன் மூலம் காணி கொள்வனவு செய்து வேலைகளை ஆரம்பித்ததையும் கண்டு கொள்ள வில்லை? என்ற விடயத்தினை முஸ்லிம் சமுகம் வினவுகின்றனர்.
இதேபோல் பொதுபல சேனாவின் ஞானசார தேரரின் மற்றய கண்டுபிடிப்புத்தான் தப்லீக் ஜமாத்தினர் நகர்ப்புறங்களில் காணிகளை பல மடங்கு பணத்தினைக் கொடுத்து அபகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் அவர் நிதானமற்ற நிலையில் இருப்பதையும் ஒரு சமுகத்தினை பழி வாங்கும் வகையில் செல்வதனையுமே காட்டி நிற்கின்றது எனலாம்.
ஞானசார தேரருக்கு அறபு நாடுகளின் பணமும், எரிபொருளும், ஏனைய உதவிகளும் தேவை ஆனால் முஸ்லிம்கள் இங்கு வாழக்கூடாது, அறபு நாட்டவர்கள் இங்கு வரக்கூடாது, அவர்கள் முதலீடு செய்யக் கூடாது போன்ற வேடிக்கையான கதைகள் அவர்களின் வங்குறோத்து செயற்பாடுகளையும், இனவாதக் கொள்கைகளையும் வெளிப்படையாகவே கோடிட்டுக் காட்டுகின்றன எனலாம்.
ஞானசார தேரருக்கு உண்மையான அறிவு, ஞானமிருப்பின் இவ்வாறு தடுமாற மாட்டார் இன்று அவருக்கே அவரின் பௌத்த தர்மம் விளங்காது தடுமாறுவதையே அவரின் சிறு பிள்ளைத் தனமான செயற்பாடுகளில் இருந்து காணக் கூடியதாகவுள்ளதாக முஸ்லிம் புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நாட்டில் நீதி மன்றங்கள் உள்ளன, சட்டம் உள்ளது. ஒருவர் அடாத்தாக காணி பிடித்தாலோ அல்லது குற்றமிழதை;தாலோ சட்டத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை பொதுபல சேனா போன்ற இனவாத குழுக்கள் நேரடியாகவே பத்தரிகையாளர் மாநாடுகளை வைத்து ஒரு சமுகத்தினை அவர்களின் சமய, சமுக உணர்வுகளை மதிக்காது அவர்களை துவம்சம் செய்து பாதிக்கும் வகையில் பகிரங்கமாக அறிக்கைகளை விடுவதும், கருத்துக்களை தெரிவிப்பதும் ஒரு ஜனநாயக நாட்டில் மிகவும் பாரதூரமான விடயமும், மனித உரிமை மீறல் விடயமுமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தமது கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.
தற்போதைய தேசிய நல்லிணக்க அரசாங்கத்தினை இந்த நாட்டின் மூவினத்தையும் சேர்ந்த பெரும்பாலான மக்களே ஆட்சிக்கு அமர்த்தினர். இவ்வாறு அமர்த்தியதன் பயனை அந்த மக்கள் எந்தவித தடைகளும், அச்சுறுத்தல்களும் இன்றி அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தினை அரசாங்கம் பொறுப்புடன் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் பொதுபல சேனா போன்ற இனவாத கும்பல்களின் அட்டூழியங்களுக்கு இனியும் சந்தப்பங்களை வழங்காது தமது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து அமைதியையும், சமாதானத்தினையும் குழப்புவதால் அவர்களின் முழுச் செயற்பாடுகளையும் அரசாங்கம் கட்டுப்படத்த வேண்டும் என முஸ்லிம் சமுகம் தமது கோரிக்கைகளை விடுகின்றனர்.
இந்த விடயத்தில் அரசாங்கம் அதீத கவனஞ் செலுத்தா விட்டால் தற்போதைய தேசிய நல்லிணக்க அரசின் அடிப்படைகளும், அதன் நோக்கங்களும் வெறும் கண்துடைப்பான விடயங்களாகவே அமைந்து ஈற்றில் பொதுபல சேனா உள்ளிட்ட ஏனைய தீய இனவாத அமைப்புக்கள் இந்த நாட்டினை ஜனநாயக இறைமையை சாகடித்து பர்மா முஸ்லிம்களுக்குச் செய்துவரும் மிகமோசமான அட்டூழியங்களை இந்த நாட்டிலும் மேற்கொண்டு மீண்டும் ஒரு வன்முறைக் கலாச்சாரத்தினையும், அமைதியற்ற நிலைமைகளையுமே தோற்று விப்பர் என்பதில் ஐயமில்லை.
எனவே எதிர் காலத்தில் இலங்கை ஒரு அமைதியானதும், சமாதானமுமான நாடாக திகழ வேண்டுமானால் இனவாதம் என்ற கருத்தோ அல்லது அவற்றை மேற்கொள்ளும் சக்திகளோ, அமைப்புக்களோ இருக்க கூடாதென்ற ஒட்டுமொத்த முடிவிற்கு வந்து இந்த நாட்டு மக்கள் சமாதானத்திற்கும், அமைதிக்குமாக வழங்கிய வாக்குகளை உயிர் பெறச் செய்யும் வகையில் மத நிந்தனைச் சட்டத்தினை எழுத்து வடிவில் மட்டும் வைத்திராது அதனை செயல்வடிம் கொடுத்து அமுல்படுத்த வேண்டும் என்கின்றனர்.