களுத்துறையில் பள்ளிவாசல் மீது, தாக்குதல் (படங்கள்) முள்ளிநியூஸ்

களுத்துறையில் பள்ளிவாசல் மீது, தாக்குதல் (படங்கள்)


களுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு கல்வீசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுத்துறை, மஹா ஹீனட்டியங்கல பிரதேசத்தில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் மீதே நேற்று நள்ளிரவு தாண்டிய நிலையில் சுமார் ஒரு மணியளவில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த பள்ளிவாசலின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்துள்ளன.

கல்வீச்சுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்து இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW