உண்மை : சுதந்திரக் கட்சியால் மகிந்தவின் பெயர் இன்றி ஒரு சங்கத்தின் தலைவர் போஸ்ட்டைக் கூட வெல்ல முடியாது..!! பெசில் சவால் விடுகிறார் முள்ளிநியூஸ்

உண்மை : சுதந்திரக் கட்சியால் மகிந்தவின் பெயர் இன்றி ஒரு சங்கத்தின் தலைவர் போஸ்ட்டைக் கூட வெல்ல முடியாது..!! பெசில் சவால் விடுகிறார்



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயரைப் பயன்படுத்தாமல், கிராமம் ஒன்றிலுள்ள சிறிய சங்கம் ஒன்றின் தலைவர் பதவியையாவது பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கம்பஹா தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கட்சியின் முதலாவது பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

புதிய கட்சியின் அங்குரார்ப்பணம் 10 ஆயிரம் அங்கத்தவர்களுடன் தான் இடம்பெறும் என கூறியிருந்தோம். தற்பொழுது இந்த எண்ணிக்கை 15 ஆம் திகதியைத் தாண்டும்போது 12 ஆயிரத்தையும் தாண்டும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW