எத்தனை ‘ஆவா’ வந்தாலும் இனியொரு யுத்தமில்லை: இராணுவம்

வடபுலத்தில் எத்தனை ஆவா குழுக்கள் உருவானாலும் இனியொரு யுத்தத்துக்கு இடமில்லையெனவும் எதற்கும் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க.
பாதாள உலக கோஷ்டியினரின் நடமாட்டம் வடக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் இருப்பதாகவும் நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்றை உருவாக்குவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.