நெருப்பை மூட்டி பெற்றோலையும் ஊற்றியதாகி விட்டது: ஹரீஸ்(VIDEO) முள்ளிநியூஸ்

நெருப்பை மூட்டி பெற்றோலையும் ஊற்றியதாகி விட்டது: ஹரீஸ்(VIDEO)



முஸ்லிம் தனி நபர் சட்டத்திருத்தம் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்தின் அணுகு முறை தவறாக அமைந்து விட்டது என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், இவ்விடயத்தில் சமூகத்தின் ஒரு பகுதியினரும் தவறான அணுகு முறையிலேயே பதிலளிக்கச் சென்று நெருப்பையும் மூட்டி பெற்றோலையும் ஊற்றி க் கொடுத்தது போன்றாகி விட்டது என தெரிவித்தார்.

சோனகர்.கொம்முடனான பிரத்யேக நேர்காணலின் போது இது தொடர்பில் விளக்கமளித்த பிரதியமைச்சர், தெற்கில் இனவாதத்தை வியாபாரமாக செய்வோருக்கு இவ்விடயம் தற்போது நெருப்பையும் மூட்டி பெற்றோலையும் ஊற்றிக் கொடுத்தது போன்றாகிவிட்டது என தெரிவித்திருந்தார்.

இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உபகுழு உருவாக்கப்படும் போது அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் பங்கேற்கும் எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடப்பட்ட பின்பே முடிவொன்று ஏற்படும் எனவும் இதுவரை இவ்விவகாரம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லையெனவும் நீதியமைச்சு மட்டத்திலேயே தற்போது இது ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய இராச்சியம் சென்றிருக்கும் பிரதியமைச்சர், அங்கு சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பாலுடனான நேர்காணலின் போது இது குறித்து தெரிவித்த விரிவான கருத்துக்களடங்கிய காணொளிப் பகுதி:
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW