தோப்பூரில் கடும் மழை வீடுகளுக்குள் நீர் புகுந்து பொது மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்பு( photos)
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதினால் வீடுகளுக்குள் நீர் புகுந்து காணப்படுவதோடு பொது மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.வீதிகளில் நீர் நிறைந்து காணப்படுவதினால் சில வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தோப்பூர் பிரதேசத்திள்குட்பட்ட அல்லைநகர், பாலத்தோப்பூர், இக்பால்நகர், செல்வநகர் பள்ளிக்குடியிருப்பு போன்ற கிராமங்களிலுள்ள 100க் கணக்கான பொது மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்கிராமங்களில் நீர் வாடிந்தோடும் வகையில் ஒழுங்கான முறையில் வடிகாண்கள் அமைக்கப்படாமையே இவ்வாறு வீடுகளுக்குள் நீர் புகுவதற்கு பிரதான காரணமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி அனுப்புனர்:-
தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி