புதிதாக உருவெடுத்த இனவாதி டான் பிரியசாத்துக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. முள்ளிநியூஸ்

புதிதாக உருவெடுத்த இனவாதி டான் பிரியசாத்துக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.



அண்மையில் ஸ்ரீலதஜ அமைப்பினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் உருவாகி வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் இனவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த டான் பிரியசாத் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொடர் வலியுறுத்தலின் பின்னணியில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான முறைப்பாடுகள், ஆதாரங்களைக் கையளிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.

 கைது செய்யப்பட்ட நபருக்கு எதிரான வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது. குற்றச்சாட்டுகள் ஆவணப்படுத்தப்பட்ட பின் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 தமது ஆதரவாளர்களை புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு கைதான நபர் சார்பில் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் நேரடி முறைப்பாடு பதிவு.

 சட்டத்தரணி என்.எம். ஷஹீத் பிரசன்னம், அசாத் சாலி நேரடி வாக்குமூலம், வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளே கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நேற்று கைதான புதிதாக உருவெடுத்த இனவாதி டான் பிரியசாத்துக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குறித்த நபருக்கு எதிராக குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் வெல்லம்பிட்டி பொலிசார் இன்று அவரைக் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் அவருக்கு எதிராக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, காணொளிகள் அடங்கிய டிவிடியும் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது கொழும்பு நீதிமன்றம்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கோட்டை பொலிஸ் நிலையத்தினால் பல குற்றப்பிரிவுகளின் கீழ் குறித்த நபருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிiலியல் புத்த மதத்துக்கு அவமானச் சின்னமாகவும் மனித குலத்துக்கு அபாயகரமான பேர்வழியாகவும் குறித்த நபர் உருவெடுத்துள்ளதாக நீதிபதி எச்சரித்துள்ளார்.

சட்டத்தரணிகள் சிராஸ் நூர்டீன், சப்ராஸ் ஹம்சா, ருஷ்டி ஹமீட் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்த அதேவேளை என்.எம்.ஷஹீத் குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாட்டை நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW