கல்முனை இ.போ.ச பேருந்து மீது கல் வீச்சு

கல்முனை போக்குவரத்து டிப்போவிற்கு சொந்தமான கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்று மட்டக்களப்பு, கல்லடிக்கு அண்மித்த பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு கல்வீச்சுக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் இல்லையெனினும் இரு மணி நேர தாமதத்தின் பின் பயணிகள் வேறு பேருந்தில் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமையும் பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.