யாழில் இயங்கும் பாதாள உலக கோஷ்டியான ஆவா குழுவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களைக் கைது

யாழில் இயங்கும் பாதாள உலக கோஷ்டியான ஆவா குழுவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது பொலிஸ்.
நால்வர் நேற்றைய தினம் கைதான அதேவேளை இருவர் இன்று சுண்ணாகம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த குழுவை உருவாக்கியது கோத்தபாயவே என அண்மையில் அமைச்சர் ராஜித தகவல் வெளியிட்டிருந்த நிலையில் அரச மட்டத்திலும் இது குறித்த அறிக்கைகளும் மறுப்பறிக்கைகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையிலேயே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.