‘தீ’ பரவ தீவிரவாதிகளே காரணம் என்கிறார் நெடன்யாஹு முள்ளிநியூஸ்

‘தீ’ பரவ தீவிரவாதிகளே காரணம் என்கிறார் நெடன்யாஹு



இஸ்ரேலில் காட்டுத்தீ பரவலால் ஹைபா நகரிலிருந்து மாத்திரம் 75,000 பேர் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் தீவிரவாதிகளே எரயூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெடன்யாஹு
.

வட இஸ்ரேலிலிருந்து காட்டுத் தீ பரவியதாகவே தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் ஐம்பது வீதம் தீவிரவாதிகளின் நடவடிக்கையென தெரிவித்துள்ள அவர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கையும் பழிவாங்கலும் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீயணைப்புக்கு உதவ பலஸ்தீன அதிகார சபையும் நேற்றைய தினம் முன்வந்திருந்தமையும் துருக்கி, கிறீஸ் உட்பட்ட நாடுகள் தீயணைப்புப் பணிகளுக்கான விமான உதவிகளையும் வழங்க முன் வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW