யாழில் சம்பவம்: 47 வயதானபெண் 22 வயதான இளைஞனை திருமணம் செய்துள்ளார்

யாழில் சம்பவம் யாழ் தென்மராட்சிப் பகுதியில் 47 வயதான அரச உத்தியோகத்தரான பெண் 22 வயதான இளைஞனை பதிவுத் திருமணம் புரிந்துள்ளார். குறித்த பெண்ணும் இளைஞனும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆன்மீக நிறுவனம் ஒன்றில் சேவை செய்து வந்தவர்கள் எனவும்
அதன் போதே இவருவரும் காதலித்து பதிவுத்திருமணம் முடித்துள்ளதாகவும் தெரியவருகின்றது,
இளைஞன் பதிவுத்திருமணம் முடித்த சம்பவத்தைக் கேள்வியுற்ற இளைஞனின் தாயார் குறித்த ஆன்மீக நிறுவனத்தில் வந்து கத்திக் குளறியதுடன் பின்னர் இளைஞனைக் கூட்டிச் சென்ற அந்த பெண்ணிண் வீட்டிலும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் குறித்த பெண் நடாத்திய பேச்சுவார்த்தையில் தாயாரும் உறவினர்களும் இளைஞனின் பதிவுத் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காது சம்மதம் தெரிவித்ததாக தெரியவருகின்றது.
இதே வேளை குறித்த பெண் பெருமளவு பணத்தை தாயாரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாகவும் தெரியவருகின்றது.
இஹ்ஸானா- பரீத்