முள்ளிப்பொத்தானை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் முஸ்லிம்களின் மார்க உடையனிந்து வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண்கள் மூவர் கைது முள்ளிநியூஸ்

முள்ளிப்பொத்தானை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் முஸ்லிம்களின் மார்க உடையனிந்து வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண்கள் மூவர் கைது


திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவு முள்ளிப்பொத்தானை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் முஸ்லிம்களின் மார்க உடையனிந்து வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று 09 புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் முள்ளிப்பொத்தானை பகுதியில் இடம் பெற்றதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இப் பெண்கள் குறிப்பாக பெண்கள் நாடாத்தி வந்த கடைசியில் பொருள் கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்து ஒருவர் கதைத்து கொண்டு இருக்கும் போது மற்றவர் ஆட்டாவில் பெருட்களை ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்று கொண்பிர்ந்தனர்.

அவர்களை பொது மக்கள் ஒன்று திரண்டு துரத்தி சென்று பிடிக்க முடியாமையால் வீதி போக்குவரத்து பொலிஸின் உதவியை நாடி முவரையும் ஆட்டாவையும் அதன் சாரதியையும் தம்பலகாமப் பொலிசார்
கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணையை தம்பலகாமம் பொலிஸான்
மோற்கொண்டு வருகின்றனர் .
இப் பெண்கள் மூவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத் 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW