பொபைல் பாவனையாளர்களைக் குறி வைத்து “பரிசு” மோசடி; அவதானம்! முள்ளிநியூஸ்

பொபைல் பாவனையாளர்களைக் குறி வைத்து “பரிசு” மோசடி; அவதானம்!


கைத்தொலைபேசி பாவனையாளர்களைக் குறி வைத்து மேலும் ஒரு மோசடி நிகழ்ந்துவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வார இறுதியில் இடம்பெற்றுள்ளது.

பாவனையாளர்களுக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு 2.000 முதல் 10,000 வரையான பதிவுப் பணத்தை ஈசி-கேஷ் மூலமாக அனுப்பும் படியும் கோரி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒரு சம்பவம் குறித்து நேற்று முன் தினம் தலங்கம பொலிசில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாக அருகிலுள்ள பொலிசில் முறையிடும்படி பொலிசார் தெரிவித்துள்ளமை யும் முன்னதாக இவ்வாறு சர்வதேச நாடுகளிலிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW