மட்டக்களப்பு மாவட்ட தபாலகங்களுக்கான சிற்றூழியர் நியமனம்
மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்ட தபாலகங்களில் நிலவி வந்த சிற்றூழியர் நியமனம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசில் தீர்வு கிடைத்துள்ளதாக அஞ்சல்,அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளர் அல்ஹாஜ் எச்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
சிற்றூழியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி தபால் நிலையத்தில் தபாலதிபர் எம்.காரியப்பர் தலைமையில் இடம் பெற்றது. ஊழியர்களுக்கான நியமனத்தினை அஞ்சல்,அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.முஸ்தபா வழங்கி வைத்தார் இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தபாலகங்களில் காணப்பட்டு வந்த சிற்றூழியர் வெற்றிடம் தொடர்பிலான விடயத்தினை நான் கௌரவ அமைச்சர் அஞ்சல்,அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் எச்.எம்.எம் ஹலீம் அவர்களில் கவனத்திற்கு கொண்டுவந்ததினை அடுத்து அமைச்சரின் விசேட பணிப்புரையில் கீழ் ஆறு பேருக்கு இந்த சிற்றூழியர் நியமனம் வழங்கப்பட்டதாக எச்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
மேற்படி நியமனம் குறிப்பாக காத்தான்குடி, ஏறாவூர், ஆரயம்பதி, கொக்கட்டிச்சோலை,செங்கலடி,மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த தமிழ்,முஸ்லிம் சகோதரர்களுக்கு எந்தவிதமான இனப் பாகுபாடின்றி எனது சிபாரிசின் பேரில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அஞ்சல்,அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.முஸ்தபா இதன் போது தெரிவித்தார்.
இஹ்ஸானா- பரீத்