மாணவர்களை சுடப்போவதாக பொலிஸார் மிரட்டல் ; யாழ்.பல்கலைக்கழக விடுதிக்குள் சம்பவம் முள்ளிநியூஸ்

மாணவர்களை சுடப்போவதாக பொலிஸார் மிரட்டல் ; யாழ்.பல்கலைக்கழக விடுதிக்குள் சம்பவம்


யாழ்ப்பணம் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்த பொலிஸார் மாணவர்களை சுடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பொலிஸார் மாணவர்களை சுடப்போவதாக அச்சுறுத்தி சென்றுள்ளனர் .

இச் சம்பவம் நேற்றிரவு 11.45 மணியளவில் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

மாணவன் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த பொலிஸார் இப்படி ஒரு கொண்டாட்டமும் இனி கொண்டாட முடியது எனவும் குழப்பங்களில் ஈடுபட்டால் சுடுவோம் எனவும் அச்சுறுத்தி சென்றுள்ளதோடு சில மாணவர்களின் தகவல்களையும் திரட்டிச் சென்றுள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கே.ரஜீவன் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW