முள்ளிப்பொத்தானை,மற்றும் கந்தலாவ மத்திய மறுந்தகத்திற்கு கி.மா சுகாதார அமைச்சர் நசீர் திடீர் விஜயம் முள்ளிநியூஸ்

முள்ளிப்பொத்தானை,மற்றும் கந்தலாவ மத்திய மறுந்தகத்திற்கு கி.மா சுகாதார அமைச்சர் நசீர் திடீர் விஜயம்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் வேண்டுகோளின் பெயரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை , முள்ளிப்பொத்தானை,மற்றும் கந்தலாவ மத்திய மறுந்தகத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை (17) மேற்கொண்டு குறைகளை கண்டறிந்து 2017 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் அவசர பிரிவுக்கான கட்டிட வசதி மற்றும் நோயாளர்களுக்கான புதிய கட்டில்கள் மற்றும் பல் சிகிச்சைக்கான உபகரணங்கள் என்பன வழங்குமாறு உடன் வருகை தந்த திட்டமிடல் வைத்தியருக்கு பணித்தார்.

மேலும் பிரதேச கர்ப்பிணி தாய் மார்கள் தமது இரத்தப்பரிசோதனைக்காக திருகோணமலை நகருக்கு செல்வது கடினம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டியதை அடுத்தது அமைச்சர் வாரத்தில் இரு நாட்கள் தம்பலகாமம் பிரதேசத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

மேலும் முள்ளிப்பொத்தானை பகுதியிலுள்ள கந்தலாவ மத்திய மருந்தகத்திற்கு விஜயம் மேற்கொண்டு வைத்தியர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளின் பெயரில் ஆம்புலன்ஸ் வண்டி,வைத்தியசாலைக்கான மின் விசிறிகள் என்பன உடன் பெற்றுக்கொடுக்கும்படி திட்டமிடல் வைத்தியருக்கு பணித்ததுடன் குறித்த மறுந்தகத்தில் குழந்தைபேறு வசதிக்கான நிலையமாக மாற்றுபடி பொதுமக்கள் வேண்டியதை அடுத்து குறித்த பிராந்திய பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத் 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW