இஸ்லாமிய பெண்ணை சாலையில் வைத்து தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்..! முள்ளிநியூஸ்

இஸ்லாமிய பெண்ணை சாலையில் வைத்து தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்..!




ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இஸ்லாமிய பெண்ணை அவரது கணவர் சாலையில் வைத்து தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலாக் கூறி பெண்களை விவகாரத்து செய்யும் விவகாரம் தற்போது நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இர்பான் என்பவருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை என கூறப்படுகிறது. தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிற்ந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சாலையில் திடீரென தனது மனைவியை சந்தித்து மூன்று முறை தலாக் கூறி இர்பான் விவாகரத்து செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து.

இர்பானின் இந்த செயலுக்கு அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW