(படங்கள்) ஜெர்மனில் கிறிஸ்துமஸ் வாடிக்கையாளர்கள் மீது லொறி மோதி 12 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கான் நாட்டவருக்கு வலைவீச்சு.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் அங்காடி ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வேகமாக வந்த லொறி ஒன்று மோதியதால் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பாரிய விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 45 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அகதி ஒருவரே குறிப்பிட்ட HGV
லொறியை திருடி எடுத்து வந்து ஜன நெருக்கடியான இடத்தில் பொது மக்களை கொன்றுள்ளதாகவும், லாரியின் சாரதி போலந்து நாட்டவர் அதனுள் சடலமாக இருப்பதாகவும் ஜெர்மன் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
