தூதர் கொலை; ரஷ்ய உறவை சீர் குலைக்க சதி: துருக்கி முள்ளிநியூஸ்

தூதர் கொலை; ரஷ்ய உறவை சீர் குலைக்க சதி: துருக்கி



துருக்கிக்கான ரஷ்ய தூதர் கொலையானது ரஷ்ய – துருக்கி உறவை சீர் குலைக்க மேற்கொண்ட சதியென தெரிவித்துள்ளார் அங்காரா மேயர் Melih Gökçek.

நேற்றைய தினம் பணியில் இல்லாத போதிலும் தனது பொலிஸ் அடையாள அட்டையைக் காண்பித்து ரஷ்ய தூதர் கலந்து கொண்ட ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்திருந்த 22 வயதான Mevlut Mert Aydintas எனும் கடந்த இரு வருடங்களாக துருக்கி பொலிசில் பணியாற்றிவரும் நபரே இக்கொலையைச் செய்துள்ள அதேவேளை கொலையாளியும் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், இது விடயத்தில் தாம் அவசரப்படப் போவதில்லையென ரஷ்யா தெரிவித்திருக்கின்ற நிலையில் இரு நாட்டு உறவை சீர்குலைக்கான சதி நடவடிக்கையே இதுவென அங்கார மேயரும் தெரிவித்துள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து துருக்கி அதிபர் அர்துகான் ரஷ்ய அதிபர் புட்டினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ள நிலையில் ரஷ்ய புலனாய்வுக்குழுவொன்று துருக்கிக்கு உடனடியாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW