1200 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!
தெற்காசியாவின் மிகப்பெரும் போதைப் பொருள் கடத்தலை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
நேற்றைய தினம் ஈக்வடோரிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலிலிருந்து 800 கிலோ கொகைன் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுமதி 1200 கோடி ரூபாய் எனவும் இதுவே இதுவரை தெற்காசியாவில் கைப்பற்றப்பட்டுள்ள மிகப்பெரும் போதைப் பொருள் கடத்தல் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த போதைப் பொருள் இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்தததாகவும் இலங்கைக்குள் கொண்டு வருவது கடத்தல்காரர்களின் திட்டமில்லையெனவும் பொலிசார் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.