பரீட்சையில் ஆள்மாறாட்டம்: ஆசிரியர் வசமாக சிக்கினார் – வவுனியாவில் சம்பவம் முள்ளிநியூஸ்

பரீட்சையில் ஆள்மாறாட்டம்: ஆசிரியர் வசமாக சிக்கினார் – வவுனியாவில் சம்பவம்

exam2

வவுனியா, உலுக்குளம் மகாவித்தியாலயத்தில் பிறிதொரு நபருக்காக ஆள்மாறாட்டம் செய்து சாதாரணதரப் பரீட்சை எழுதியதாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை டிசம்பர் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியா மின்சார சபையில் பணியாற்றும் ஒருவருக்கு சாதாரண தரப்பரீட்சையில் தோற்றுவதற்காக அனுமதியட்டை கிடைத்திருந்தது.

இந் நிலையில் குறித்த நபர் மேற்படி கைது செய்யப்பட்டுள்ள சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியருடன் ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டு பரீட்சையில் தோற்றச் செய்துள்ளார்.

இந் நிலையில் குறித்த நபர் மீது பரீட்சை மேற்பார்வையாளர்கள் சந்தேகம் கொண்டு பரிசோதித்தபோது பிறிதொருவருக்காக ஆசிரியர் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கிளை விசாரித்த வவுனியா மாவட்ட நீதிமன்றம் குறித்த ஆசிரியரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள். (tw)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW