இலங்கையில் பேரழிவை உண்டாக்கிய சுனாமி 12 ஆண்டுகளாகியும் நெஞ்சைவிட்டு அகலாத சோகம் முள்ளிநியூஸ்

இலங்கையில் பேரழிவை உண்டாக்கிய சுனாமி 12 ஆண்டுகளாகியும் நெஞ்சைவிட்டு அகலாத சோகம்




2004ம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டு இலங்கையில் பேரழிவை உண்டாக்கிற சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றோடு 12 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு, மலேசியா, மடகஸ்கார், சோமாலியா என பல்வேறு இடங்களைச் சென்றடைந்த குறித்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையில் மாத்திரம் 35,957 பேர் உயிரிழந்திருந்ததோடு 5000 பேர் வரை காணாமல் போயிருந்ததாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

90,000 கட்டிடங்களும் சேதமடைந்ததாகக் கணக்கிடப்பட்டிருந்த நிலையில் சுனாமி நிவாரண நிதி மற்றும் வீதி அபிவிருத்தியில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றதோடு அவை தொடர்பில் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.

கிழக்கில் சவுதி நிதியுதவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளும் பகிர்ந்தளிக்கப்படாது இழுபறிக்குள்ளான நிலையில் 12 வருடங்கள் கழிந்துள்ளமை அவ்வேளையில் 9.3 ரிக்டர் அளவு நில நடுக்கம் ஏற்பட்டிருந்ததாக அளவிடப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW