சென்னையில் இருந்து 150 கிமீ தொலைவில் #Vardah முள்ளிநியூஸ்

சென்னையில் இருந்து 150 கிமீ தொலைவில் #Vardah



இன்று அதிகாலை நிலவரப்படி, சென்னையில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது வர்தா புயல். மேற்கு-வடமேற்கு திசைநோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. இரவு ஒரு மணியில் இருந்து சென்னையைச் சுற்றி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. காற்று மிகவும் பலமாக வீசுகிறது. இன்று மதியம் வர்தா கரையைக் கடக்கும்போது இன்னும் பலமாக காற்று வீசும்!

புயல் கரையை கடப்பதால் இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவிலிருந்து பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW