‛வர்தா’ புயலை எதிர்கொள்ளத் தயாராகும் சென்னை! முள்ளிநியூஸ்

‛வர்தா’ புயலை எதிர்கொள்ளத் தயாராகும் சென்னை!



File photo

இன்று மதியம், சென்னை அருகே கரையோரப் பிரதேசமூடாக கடக்கவிருக்கும் ‘வர்தா’ புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என அறிவித்துள்ள தமிழக அரசு குறித்த இடங்களில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறையளித்துள்ளது.



பலத்த காற்று வீசும் போது எற்படக்கூடிய மின்சாரம் தொடர்பான பிரச்னைகளை சமாளிக்கவும் வருவாய் துறையும் மின்வாரியமும் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீ்ட்டு மேடான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் இடம்பெறுவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW