தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: ஏழ்வர் காயம்
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 7 மீனவர்கள் காயமடைந்தனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 5 நாள்களுக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 800 பேர், 194 விசைப்படகுகளில் சனிக்கிழமை அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
வழக்கம்போல இந்திய கடல் எல்லைக்குள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளில் இருந்த மீனவர்கள் திலீப் (25), பழனிச்சாமி (35), ராபின் (19), பிரதீப் (28), பிரசாந்த் (21), முத்தையா (19), கலைக்குமார் (21) ஆகியோரை தாக்கி, அவர்களது படகுகள், வலைகளை சேதப்படுத்தினராம்.
இதையடுத்து தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் உடனடியாக கரை திரும்பி, மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என தினமணி செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.