கிழக்கு மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (20/12/2016)
கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்டம் இன்று (20) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) வரை தவிசாளர் சந்திரதாச கலப்பதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன்று (20) முதலமைச்சர் நஸீர் அஹமடினால் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2017ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குழுநிலை விவாதமும்,முதலமைச்சுக்கான விவாதத்துடன் வாக்கொடுப்பும் இடம்பெறவுள்ளது
இதனைத்தொடர்ந்து நாளை (21) விவசாய அமைச்சர் துரைராசசிங்கமினால் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி, கூட்டுறவு அபிவிருத்தி ஆகிய திணைக்களங்களுக்கான வரவு –செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பித்த பின் குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் (23) கல்வி அமைச்சர் தாண்டாயுதபாணியினால் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான வரவு – செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பித்த பின் குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.
அன்றையதினம் மாலை சுகாதார அமைச்சர் முஹம்மட் நஸீரினால் சுகாதார, சுதேச வைத்திய, நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சு தொடர்பான வரவு –செலவுத்திட்ட அறிக்கையும், குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.
இறுதிநாளான (24)ஆம் திகதி வீதிய அபிவிருத்தி அமைச்சரினால் ஆரிய கலபதியினால் வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தித்திறன் மற்றும் மனிதவலு அபிவிருத்தி, மகளிர் விவகாரம், நீர்வழங்கல் அமைச்சின் வீதி அபிவிருத்தித் திணைக்களம் காணி நிர்வாகத் திணைக்களம் ஆகியவற்றின் குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதுடன் அமைச்சுகளுக்கான வாக்கெடுப்புக்கள் நிறைவேறும்.
இதனைத் தொடர்ந்து மாகாணசபையின் தொகுப்பு உரையும் முதலமைச்சரின் தொகுப்பு உரையும் நடைபெறும்.
இறுதியில் வரவு -செலவுத்திட்ட விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.