2017: இலங்கை அரசியலில் ‘முக்கிய வருடம்’: சம்பந்தன்
இலங்கை அரசியலில் எதிர்வரும் வருடம் முக்கிய வருடமாக அமையும் என தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன்.
தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டிய தேவையுடன் புதிய வருடத்தை எதிர்நோக்கும் இலங்கை அரசியல் வரலாற்றில் 2017 முக்கிய வருடமாகத் திகழும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.