சுற்றாடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் : இல்லாவிட்டால் 25 ஆயிரம் ரூபா தண்டம் முள்ளிநியூஸ்

சுற்றாடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் : இல்லாவிட்டால் 25 ஆயிரம் ரூபா தண்டம்


டெங்கு நோய் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் வகையில பத்து மாவட்டங்களிள் உள்ள 30 சுகாதார வைத்திய பிரிவுகளின் பணியாளர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படவுள்ளது. இதற்கான விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு மேலதிகமாக டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு 25 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பது தொடர்பிலான வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் கட்டமைப்பை துப்பரவு செய்யும் நடவடிக்கை திருப்திகரமாக இடம்பெறுவதில்லை. இதற்காக முறையான வேலைத்திட்டத்தை பாடசாலை அதிபர்கள் மேற்கொள்வதற்கு தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW