நல்லதோர் ஆட்சி முறைமைக்கு நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளார் – பிரதமர் முள்ளிநியூஸ்

நல்லதோர் ஆட்சி முறைமைக்கு நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளார் – பிரதமர்



இஸ்லாம் மதத்தின் இறுதி நபியான முஹம்மத் நபியவர்கள் சிறந்ததோர் சமூகமொன்றை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மிகச் சிறந்த ஓர் தூதுவர் ஆவார். இஸ்லாத்தின் பிரகாரம் இறைவன் நபியவர்களை அவரது 40 வயதில் நபியாகத் தேர்தெடுத்ததுடன், அது வரை நபியவர்கள் மிகவும் சரளமான, சாதாரண, சிறப்பானதோர் வாழ்வினைக் கழித்து மதத்தை நடைமுறை ரீதியாக வாழச் செய்து வந்தார்கள்.

பல தலைமுறைகளாக கோத்திர யுத்தங்கள் இடம்பெற்ற மதீனா நகரத்தில் சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, நல்லதோர் ஆட்சி முறைமைக்கு
வழிகாட்டிய நபியவர்கள் அதன் ஊடாக முழு உலகிற்கும் சகோதரத்துவம், சகவாழ்வு, சமத்துவம், தாராளத்தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சிறந்ததோர் மார்க்கத்தையும், வாழ்க்கை வழிமுறையினையும், ஜனநாயக ஆட்சி முறையினையும் காட்டித் தந்தார்கள்.

இஸ்லாமிய சமயப் பிரச்சாரத்தில் அன்பான, நெகிச்சி மிக்க ஓர் கொள்கையைக் கடைபிடித்து, 23 வருட போதனை, செயல், தியாகம் என்பற்றின் மூலம் அவர்கள் காட்டித் தந்த இஸ்லாம் மதத்தின் உள்ளடக்கமானது, நபியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் இன்றைய தினம் நம் அனைவருக்கும் சிறப்பான முன்மாதிரியாக அமைகிறது என்பதை விசேடமாக குறிப்பிட வேண்டும்.

நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலம் எமது வாழ்வையும், முழு உலகையும் அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள இந்த மீலாதுன்நபி தினத்தில் உறுதி பூணுவோம்.

சகோதர இலங்கை முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து உலக முஸ்லிம்களுக்கும் சிறப்பான மீலாதுன்நபி தினமாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW