திருமலை மாவட்ட SLMC ஆனது தனது போராளிகளுக்கு மத்தியிலும் வேட்பாளர்களுக்கு மத்தியிலும் பாரிய பிளவுகளையும் வங்குரோத்தை வெளிப்படுத்தவுள்ளது.

அன்வரினை தோற்கடிக்க ஒன்றுபடும்
தம்பலகாம பிரதேச SLMC மத்திய குழு
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட SLMC ஆனது தனது போராளிகளுக்கு மத்தியிலும் வேட்பாளர்களுக்கு மத்தியிலும் பாரிய பிளவுகளையும் வங்குரோத்துகளையும் தங்கள் தேர்தல் பரப்புரைகளில் வெளிப்படுத்தவுள்ளது.
அதன் பின்னனியில் பார்க்கக்கூடியதாக இருப்பதுதான் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரினை தோற்கடிப்பதற்காக ஒன்றுபட்டுள்ள தம்பலகாம பிரதேச SLMC மத்திய குழுவினரின் அன்மைக்கால செயற்பாடுகள்.
தம்பலகாம மக்களின் மத்தியில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியினை அன்வர் கொண்டிருப்பதுடன் தனது தொடர்ந்தேர்ச்சியான மாகாண சபை உறுப்பினர் பதவியினை தீர்மானித்த சக்தியாகவும் இம்மக்களின் வாக்குகள் காணப்பட்டதினை அன்வரும் இவ்விடத்தில் ஏற்றுக்கொண்டாகவே வேண்டும்.
இவ்வாறான அரசியல் நகர்வுகளில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் பிரத்தியோகச் செயலாளர் சனூஸ் அவர்களினை இம்முறை வெற்றியடையச் செய்வதற்காக தம்பலகாம பிரதேச SLMC மத்திய குழுவினர் களமிறங்கியுள்ளனர்.
கட்சி போராளிகளுக்கு மத்தியில் சரிநிகராக செயற்பட வேண்டிய மத்தியகுழுவின் அன்மைக்கால செயற்பாடுகளால் விரக்தியுற்ற அன்வரும் அவரது ஓர் இரு நலன்விரும்பிகளும் தம்பலகாம பிரதேசத்தில் SLMC மத்திய குழுவின் பங்குபற்றுதலின்றி தன்னிச்சையாக பரப்புரைகளையும், ஒன்றுகூடல்களையும் மற்றும் கலந்துரையாடல்களையும் நடாத்திவருகின்றார்.
இதுயிவ்வாறிருக்க SLMC மத்திய குழு ஓய்வின்றி சனூஸ் அணியுடன் அவரின் வெற்றிக்காக களத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
எது எவ்வாறாயினும் SLMC மத்திய குழுவின் தீர்மானமே மக்களின் தீர்மானம் கிடையாது.
தம்பலகாம மக்கள் மாற்றத்தினை விரும்புகின்றனர்.
தங்களில் ஒருவனை மாகாண சபைக்கு தங்கள் பிரதிநிதியாக அனுப்பும் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றனர்.