பாகிஸ்தான் விமானம் 47 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது முள்ளிநியூஸ்

பாகிஸ்தான் விமானம் 47 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது

சித்ரலிலிர்ந்து இஸ்லாமாபாத் செல்லும் வழியை காட்டும் கூகுள் மேப். | படம்: சிறப்பு ஏற்பாடு.

பாகிஸ்தான் விமானம் பிகே.661 என்ற விமானம் 47 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் வடக்கு நகரமான சித்ராலிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. இந்நிலையில் அபோத்தாபாத் அருகே மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்ததாக தகவல்கள் வெளியாக்யுள்ளன.

உள்ளூர் நேரம் மதியம் 3.30 மணியளவில் சித்ரலிலிருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்டவுடனேயே கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது என்று எக்ஸ்பிரஸ் டிரைபூன் தெரிவித்துள்ளது.

அபோத்தாபாத் மாவட்டத்தில் உள்ள ஹவேலியன் என்ற ஊரில் விமானம் விழுந்து நொறுங்கியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானத்தைக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தனியால் கிலானி தெரிவித்தார்.

இந்நிலையில் உள்ளூர் போலீஸ் அதிகாரி குர்ஷீத் தனோலி அரசு தொலைக்காட்சியில் தெரிவிக்கும் போது, விமானம் ஒரு கிராமத்தில் விழுந்து நொறுங்கியுள்ளதாகவும், மீட்புக் குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்குச் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உடனடித் தகவல்கள் இதுவரை இல்லை.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW