அமைச்சர் ரிஷாத்தை கொலை செய்ய திட்டம் : கடந்த அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட புலனாய்வுத் தகவல் .

இந்தியாவின் கடும்போக்கு இந்துத்வா அமைப்பான சிவசேனா அமைப்பு இலங்கையில் தங்கள் கிளையை ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் ஆர் எஸ் எஸ் உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சிவசேனாவின் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்கபடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிவசேனா அமைப்பினரிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதற்கான திட்டம் இருப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வட கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு வெளியிட்டு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் இந்த தகவலை சம்பிக்க அமைச்சாரவையில் வெளியிட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி அமைச்சர் ரிஷாதின் பாதுகாப்பு தொடர்பில் அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.