பாதாள உலக உதம்மிட சமரே துப்பாக்கிதாரிகளால் போட்டுத் தள்ளப்பட்டார் .

பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர் என கூறப்படும் "உதம்மிட சமரே" என்பவர், சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று இரவு 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயில் கடவையில் காரொன்றில் சென்று கொண்டிருந்தபோது, சிலர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இச் சந்தர்ப்பத்தில் காரில் நால்வர் இருந்துள்ளனர். அதில் உதம்மிட சமரே உள்ளிட்ட இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், துப்பாக்கிதாரிகள் மேட்டார் சைக்கிளில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.