கிண்ணியா துறையடியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற சட்ட விரோத கட்டிடத்தை நிறுத்த அரசாங்க அதிபர் உத்தரவு

(இஹ்ஸானா பரீத்)
கிண்ணியாவின் புதிய நீண்ட பாலம் நிர்மாணிப்பதற்கு முன் பிரதேச மக்கள் கிண்ணியா துறையடினூடாக படகு (பாதை) பயன்படுத்திய வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இடஒதுக்கீடு பகுதியில் கடந்த சில வாரங்களாக நிர்மாணிக்க பட்டு வந்த சட்ட விரோத கட்டிடம் புத்தர் சிலை வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டு வந்தன குறித்த அனுமதி பெறப்படாத வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் சட்ட விரோத கட்டிடம் அமைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் 15.12.2016 திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன் வைக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குறித்த கட்டிடம் தொடர்பாக அரசாங்க அதிபரை நோக்கி இந்த நல்லாட்சியில் சமூக ஒற்றுமைக்கு மத்தியில் இவ்வாறான செயற்ப்பாடுகளை மேற்றுக்கொள்வது பொருத்தமற்றது கிண்ணியா வரவேற்பு கோபுரத்தில் முஸ்லிகளின் கலாச்சார சின்னங்கள் பிரதி பளிக்ககூடாது என பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது நியாயமாக இருந்தால் குறித்த சட்ட விரோத சிலை வைப்பு எந்த விதத்தில் நியாயமானது என்று கேள்வி எழுப்பியதுடன் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியலாளரை நோக்கி
குறித்த விடயமாக உடன் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டியதை அடுத்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரால் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பாகவுள்ள பிரதி போலீஸ் மா அதிபருக்கு குறித்த சீனக்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணித்து சட்ட விரோத கட்டிடத்தை உடன் நிறுத்தும்படி உத்தரவிட்டார்