தூதர் கொலை: சிரியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் ‘தந்திரம்’: புட்டின்
துருக்கிக்கான ரஷ்ய தூதர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரஷ்யா அவசரப்படப் போவதில்லையென தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புட்டின், சிரியாவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான தந்திரமாகவே இதனைப் பார்ப்பதாகவும் கட்டளையிட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
துருக்கி பொலிஸ் அதிகாரியொருவரினாலேயே ரஷ்ய தூதர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்விடயத்தில் தமது நாடு அவசரப்படப் போவதில்லையெனவும் இரு நாட்டு உறவுகளை சீர்குலைக்கும் வகையில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஏற்கனவே ஒரு புலனாய்வுக் குழு துருக்கி சென்றிருப்பதாகவும் இறந்தவருக்கு நினைவுத் தூபியொன்று நிர்மாணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தொலைக்காட்சி உரையில் ரஷ்ய அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.