தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!
தபால் திணைக்கள ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து வரும் நிலையில் நள்ளிரவிலிருந்து தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தமது திணைக்கள சேவையில் இடையூறுகளைத் தவிர்க்கும் வண்ணம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.