இனவாதம்: உரிய நடவடிக்கையெடுக்க பிரதமர் வாக்குறுதி முள்ளிநியூஸ்

இனவாதம்: உரிய நடவடிக்கையெடுக்க பிரதமர் வாக்குறுதி



நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதற்கு வாக்குறுதியளித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


இன்று காலை ஏ.ஆர்.சி அமைப்பினருடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர், அளுத்கம விவகாரம் தொடர்பான ஆவணங்களையும் பிரதமர் கோரியுள்ளதுடன் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் இனவாத நடவடிக்கைகள் குறித்த காணொளிகள் உட்பட ஆவணங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் அமைச்சர் ஹலீம், பா.உ முஜிபுர் ரஹ்மான் உட்பட ஏ.ஆர்.சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW