பீடி, சுருட்டுகளிலும் இனி ‘எச்சரிக்கை’ படங்கள்
சிகரட் பெட்டிகளில் போன்று பீடி மற்றும் சுருட்டுகளிலும் எச்சரிக்கைப் படங்கள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.
சிகரட்டைப் போன்று பெட்டிகளில் இவை விற்பனை செய்யப்படுவதில்லையாயினும் நாளொன்றுக்கு புகைத்தல் காரணமாக 65 பேர் வரை உயிரிழந்து வரும் நிலையில் புகைத்தலை நாட்டில் முற்றாக ஒழிக்கும் முன்னெடுப்புகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் இதனாலேயே வரியும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.