சந்தேக நபரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி மரணம் முள்ளிநியூஸ்

சந்தேக நபரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி மரணம்



கண்டி தவுலுகல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை நீதிமன்ற உத்தரவில் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகரியொருவர் திடீர் நோய்வாய்ப்பட்டு மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரை விரட்டிப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் குழுவொன்றுடன் சென்ற வேளையிலேயே இவ்வாறு நிகழ்ந்துள்ள அதேவேளை சந்தேக நபர் தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW