இலங்கையின் ஜனாதிபதியாவீர்: ஜப்பானில் கோத்தாவுக்கு ஆசீர்வாதம்! முள்ளிநியூஸ்

இலங்கையின் ஜனாதிபதியாவீர்: ஜப்பானில் கோத்தாவுக்கு ஆசீர்வாதம்!



பௌத்த மக்களைக் கட்டிக் காக்கும் தலைவனாக, ஜனாதிபதியாக என்றாவது ஒருநாள் கோத்தபாய ராஜபக்ச உருவெடுப்பார் என ஜப்பான் விகாரை நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற கோத்தபாயவை ஆசீர்வதித்துள்ளார் துன்ஹிட்டியாவே தம்மாலோக தேரர்.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கோத்தபாய ராஜபக்சவைப் பற்றி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் பௌத்த மக்களின் உரிமைக்காக இயங்கும் சிறந்த தலைவர் ஒருவர் வரவேண்டும் என விரும்பியே கோத்தபாய அங்கு அழைக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் அவர் நாட்டின் ஜனாதிபதியாக ஜப்பானிய மண்ணுக்கு வரவேண்டும் எனவும் ஆசி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW