கிண்ணியா மத்திய கல்லூரி வி.மைதானத்துக்கு பார்வையாளர் அரங்கு
கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 1கோடி 60 இலட்சம் ரூபாய் செலவில் தி/கிண்/கிண்ணியா மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்,
கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ. எம்.அகமது லெப்பை மற்றும் முன்னாள் கணிதப் பாட ஆசிரிய ஆலோசகரும் அதிபருமான ஏ.எஸ்.மஹருப் , கிண்ணியா மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.அனிபா ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நண்பர்களுடன் பகிர:-