முஸ்லிம் ச‌மூக‌த்தின் இன்றைய‌ தேவை அரசிய‌ல‌மைப்பை திருத்துத‌ல் என்ப‌த‌ல்ல‌.. முள்ளிநியூஸ்

முஸ்லிம் ச‌மூக‌த்தின் இன்றைய‌ தேவை அரசிய‌ல‌மைப்பை திருத்துத‌ல் என்ப‌த‌ல்ல‌..


அர‌சிய‌ல‌மைப்பு தொட‌ர்பில் யாரும் அச்ச‌ம் கொள்ள‌த்தேவையில்லை என‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் அமைச்ச‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் சொல்லியிருப்ப‌து அவ‌ர‌து ச‌மூக‌ அக்க‌றையின்மையை காட்டுகிற‌து.

அர‌சிய‌ல‌மைப்பை த‌யாரிப்ப‌து என்ப‌து ஆட்சியில் உள்ள‌ சில‌ரின் தேவையாக‌வும் த‌மிழ் ட‌ய‌ஸ்போராவின் தேவையாக‌வும் இருக்க‌லாம். ஆனால் முஸ்லிம் ச‌மூக‌த்தின் இன்றைய‌ தேவை அரசிய‌ல‌மைப்பை திருத்துத‌ல் என்ப‌த‌ல்ல‌. மாறாக‌ இருக்கின்ற‌ அர‌சிய‌ல‌மைப்பு ரீதியாக‌வாவ‌து இந்த‌ நாட்டில் நீதி நிலை நிறுத்த‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌துதான்.

நீதிக்கு முன் யாவ‌ரும் ச‌ம‌ம் என்கிறார்க‌ள். ஆனாப்ல் பௌத்த‌குருமாருக்கு ஒரு ச‌ட்ட‌ம் ஏனைய‌ ம‌த‌ குருமாருக்கு இன்னொரு ச‌ட்ட‌ம் அமுல் ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து ர‌வூப் ஹ‌க்கீம் அங்க‌ம் வ‌கிக்கும் இந்த‌ ஆட்சியிலாகும்.

அர‌சிய‌ல் யாப்பில் பௌத்த‌ ம‌த‌த்துக்கு முன்னுரிமை கொடுக்க‌ப்ப‌ட்டிருந்தாலும் ஏனைய‌ அனைத்து ம‌த‌ங்க‌ளுக்கும் ச‌வுரிமை கொடுக்க‌ப்ப‌ட்டிருந்தும் அள்ளாஹ்வும், ர‌சூலும் ஏனைய‌ ம‌த‌த்த‌லைவ‌ர்க‌ளால் ப‌கிர‌ங்க‌மாக‌ தூசிக்க‌ப்ப‌டும் போது அர‌சிய‌ல் சாச‌ண‌ப்ப‌டி ச‌ட்ட‌ம் ந‌டை முறைப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ நாட்டில் மீண்டும் ஒரு அர‌சிய‌ல் யாப்புத்திருத்த‌ம் செய்வ‌தால் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு எந்த‌ ந‌ன்மையையும் கொண்டு வ‌ர‌ப்போவ‌தில்லை. சில‌ வேளை இத்திருத்த‌ம் முஸ்லிம்க‌ளுக்கு மேலும் பாதிப்பை ஏற்ப‌டுத்தும் சாத்திய‌க்கூறே அதிக‌ம் உள்ள‌து. அப்போது நாங்க‌ள் ம‌ட‌த்த‌ன‌ம் செய்து விட்டோம் என‌ ஹ‌க்கீம் வ‌ழ‌மையான‌ ப‌ல்ல‌வியை பாடுவார். க‌ட‌ந்த‌ ஆட்சியிலும் இத‌னைத்தான் அவ‌ர் செய்தார்.

ஆக‌வே அர‌சிய‌ல் திருத்த‌ம் ப‌ற்றிய‌ நியாய‌மான‌ அச்ச‌ம் உல‌மா க‌ட்சிக்கு உண்டு என்ப‌தை தெளிவாக‌ சொல்கிறோம். அது ப‌ற்றி அல‌சி ஆராய்வ‌து முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளைப்பெற்ற‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் மீதான‌ க‌ட‌மையே த‌விர‌ அர‌சின் ச‌லுகைக‌ளுக்காக‌ அர‌சுக்கு வ‌க்கால‌த்து வாங்கி யாரும் அச்ச‌ப்ப‌ட‌த்தேவையில்லை என்ப‌து முஸ்லிம் ச‌மூக‌த்தின் மீதான‌ ஹ‌க்கீமின் அக்க‌றையின்மையை காட்டுகிற‌து.

மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
உல‌மா க‌ட்சி


நண்பர்களுடன் பகிர:

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW