இலங்கை முஸ்லிம் ஒருவரின் எண்ணத்தில் உருவான முள்ளிநியூஸ்

இலங்கை முஸ்லிம் ஒருவரின் எண்ணத்தில் உருவான

டிஜிடல் உலகத்தில் எதையும் இணையத்தில் செய்துவிடலாம் என்ற எண்ணப்பாங்கு இன்று நடந்தேறிக்கொண்டிருக்கும் தருவாயில் முஸ்லிம்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கும் எமது இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் நாட்டிற்குள்ளும் சர்வதேசமெங்கும் இணைய உலகில் ஜாம்பவான்களாக பரிணமித்துக் கொண்டிருக்கின்றனர்.

உங்களுக்கு நன்கு தெரிந்த Anything.lk மற்றும் Jeevana.lk போன்ற புத்தாக்க இணைய புரட்சி சேவைகளை உருவாக்கி அதீத இலாபம் ஈட்டிய ஜிப்ரி சுல்பர் பற்றி அதிகமானோருக்கு தெரிந்திருக்கு வாய்ப்பில்லை.

ஜிப்ரி சுல்பர்
இந்த இளைஞனின் புதிய சிந்தனைகளே இன்று இலங்கை இணைய உலகை ஆட்டிப்படைத்த வண்ணம் உள்ளது. அப்படி புதிய சி்ந்தனை தான் பிக் மி, PICK ME.lk என்ற இணையம், இது சாதாரண டிரவலிங் வசதிபோலல்லாது ஆட்டோக்களை வைத்து யோசிக்கப்பட்ட ஒன்று. நகர் புறங்களை பொறுத்த வரை ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது இந்த ஆட்டோக்களை பயணத்திற்கு பாவிப்பது கடும் கடினம் காரணம் அவர்களின் தன்மையும் அவர்களின் அறிவும் அப்படித்தான் இருக்கிறது. அதுமாத்திரம் இன்றி அவர்களை இலகுவில் பயணத்திற்கு உபயோகப்படுத்துவது கடினம் இப்படி அடுக்கடுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுதான் பிக்மி..

பிக்மி இணையத்தளம் அல்லது மொபைல் அப் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஆட்டோ மற்றும் கார்களை வரவழைத்துக் கொள்ள முடியும். உங்கள் மொபைலிலே பில்லும் தரப்படும் நீ்ங்கள் உங்கள் பயணத்தை பிக்மியில் வடிவமைக்க முடியும். 

சிந்தனைகள் மூலம் ஆளும் வல்லமை நம்மவர்களுக்கு வந்தமை பாராட்டக்கூடியது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW