நல்லாட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகும் முஸ்லீம் அமைப்புகள் ..

அண்மைக்காலமாக ஞானசார தேரர் இஸ்லாம் தொடர்பிலும் இஸ்லாமிய மதக்கோட்பாடுகள் மற்றும் மத நம்பிக்கை தொடர்பிலும் சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறிவரும் நிலையில் அரசு அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்து வரும் நிலையில் இந்த சினேகபூர்வ சந்திப்புக்கு முஸ்லீம் அமைப்புகள் ஆயத்தமாகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் இந்த நாட்டு முஸ்லீம்கள் ஒரு பக்கச்சார்பாக இனிமேல் இருக்க கூடாது என்பதை எடுத்துக்காட்டைக் இந்த சினேகபூர்வ சந்திப்பை நடத்த முக்கியமான முஸ்லீம் அமைப்புகள் பச்சைக்கொடி
காட்டியுள்ளன.
ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகமும் இந்த அரசுக்கு சார்பாக ஒருபக்கம் இருந்தமையானது சிங்கள மக்களிடத்தில் முஸ்லீம்கள் தொடர்பில் கடும் குரோத மனப்பாங்கை மேலும் அதிகரிக்க செய்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதய அரசு முன்வைக்க திட்டமிட்டுள்ள உத்தேச தேர்தல் ,யாப்பு திருத்தங்கள் , வடகிழக்கு இணைப்பு ஆகியன முஸ்லீம் சமூகத்துக்கு மிகப்பாதமானது என்பதால் அதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையிலும் இந்த நகர்வை முஸ்லீம் அமைப்புகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே முஸ்லீம் சமூகத்தினர் முன்னாள் ஜனாதிபதியை ரகசியமான முறையில் சந்திப்புக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.