கிண்ணியா பாடசாலைகளுக்கு புத்தகம் உபகரணங்கள் வழங்கி வைப்பு

(இஹ்ஸானா பரீத்)
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப் பட்ட அலுவலக உபகரனங்கள், புத்தகங்கள்என்பவற்றை கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் மற்றும் பாடசாலைக்கு விநியோகிக்கும் வைபவம் நேற்று வியாழன் காலை கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் சீனத்துள் முனவ்வரா நளீம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப், பிரதேச செயலாளர் எம்.எ.அனஸ், பிரதேச செயலக மற்றும் வலயக் கல்வி அலுவலக கணக்காளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வலயக் கல்வி அலுவலகத்துக்காக கொள்வனவு செய்யப் பட்ட கணனி மற்றும் அலுவலக உபகரனங்கள், கிண்ணியா ஆரம்பக் கல்வி அபிவிருத்திக்காக பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் பொருட்டு கொள்வனவு செய்யப் பட்ட பெறுமதியான பயிற்சி புத்தகங்கள் என்பன விநியோகிக்கப் பட்டன.