கிளிநொச்சியில் ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை.! முள்ளிநியூஸ்

கிளிநொச்சியில் ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை.!

Photo published for துண்டுதுண்டாக வெட்டி எரியூட்டப்பட்டு புதைக்கபட்ட குடும்பஸ்தர்..

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (62) என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இந்தியா தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கொலை சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் உடனே பெற முடியவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி நீதிமன்றின் நீதவானின் விசாரணையை தொடர்ந்து சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW