மட்டக்களப்பில் பொதுபல சேனா - முஸ்லிம் அரசியல்வாதிகளை காணவில்லை முள்ளிநியூஸ்

மட்டக்களப்பில் பொதுபல சேனா - முஸ்லிம் அரசியல்வாதிகளை காணவில்லை


(இஹ்ஸானா- பரீத்)
மட்டக்களப்புக்கு நேற்று (03) பொதுபல சேனா விஜயமொன்றை மேற்கொண்டு, அடாவடி மற்றும் வன்முறைகளிலும் ஈடுபட்டது.

தமிழர்களும், முஸ்லிம்களும் வாழும் மட்டக்களப்பில் உட்புக முடியாமல் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் தடுக்கப்பட்டார்கள். அவர்கள் தடுக்கப்பட்ட பிரதேசங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை காணமுடிந்தது. அவர்களுடன் பிரதேச தமிழ மக்களும் இணைந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டமானது ஒரு முஸ்லிம் முதலமைச்சரையும், ஒரு முஸ்லிம் ராஜாங்க அமைச்சரையும், ஒரு முஸ்லிம் பிரதியமைச்சரையும், ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட மாவட்டமாகும்.

எனினும் இவர்களின் எவருமே சம்பவ இடங்களுக்கு வருகைத்தரவோ அல்லது வீதிக்கு வந்த முஸ்லிம் சமூகத்தினருடன் இணைந்து செயற்படவோ குறைந்தபட்சம் பொலிஸாருடன் இணைந்து செயற்படவோ முன்வரவிலலை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW