நியுசிலாந்து: தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இலங்கையர் பலி
நியுசிலாந்து, ஆக்லாந்து நகரில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் (22) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவ நேரத்தில் வீட்டில் ஆறு பேர் இருந்துள்ள நிலையில் அதில் மூவர் உயிரிழந்துள்ள அதேவேளை ஏனைய மூவரும் சிகிச்சை பெற்று ஆபத்தான நிலையைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பமுகிறது.
காயங்களுடன் உயிர் பிழைத்த கைலேஷ் தனபாலசிங்கம் என்பவருடைய 66 வயது தாய், 39 வயது மனைவி மற்றும் 5 வயது குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.